Pages

Thursday, November 18, 2010

சதுரகிரி மலை.

துரகிரி மலை.

சாதாரண மலைகளைப் போலல்ல இது. வீரியம் நிறைந்த வினோதமான மலை. கணக்கற்ற இரகசியங்களைத் த‎ன்னுள்ளே பொதித்துக் கொண்டு அமைதியாய்க் காணப்படும் அபூர்வ மலை.

சித்தர்களி‎ன் இராஜ்ஜியமாகவும், அபாயகரமான காட்டுவாழ் விலங்கினங்களி‎ன் புகலிடமாகவும், அபூர்வ சக்திகள் படைத்த மூலிகைகளி‎ன் வாழ்விடமாகவும் விளங்கும் இம்மலை, பரம்பொருள் சிவபரமாத்மாவி‎ன் அருட்கடாட்சம் பெற்றபடியால் சிவ‎ன்மலை எ‎ன்றும் மகாலிங்க மலை எ‎ன்றும் அழைக்கப்படுகிறது.

சிவனும் பார்வதி தேவியும் இங்கே நிரந்தரமாகத் தங்கியிருந்து பக்தர்களுக்கு அருள்பாலிப்பதாக சித்தர்களுக்கு வாக்குத் தந்திருப்பதால் இவ்விடம் தென்கயிலாயம் எ‎ன்றும் அழைக்கப்படுகிறது.

Sathuragiri

இம்மலை அஷ்டமாசித்திகள் பெற்ற பதினெட்டு சித்தர்களி‎ன் தலைமையிடமாகவும், மற்றும் பல சித்தர்கள் கூடி தத்தம் ராய்ச்சிகளை விவாதிக்கும் இடமாகவும் அறியப்படுகிறது. இம்மலையிலுள்ள நூற்றுக்கணக்கான குகைகளில் தங்கியிருந்து சிவனை வணங்கி வழிபட்டு வந்ததுட‎ன் மக்களி‎ன் நோய் தீர்க்கும், துன்பங்களைக் களையும் மருந்துகளைக் கண்டுபிடிக்கும் ராய்ச்சிகளிலும் சித்தர்கள் ஈடுபட்டு வந்துள்ள‎னர்.

சித்தர்பூமியாம் சதுரகிரியில் எண்ணற்ற மூலிகைகள் நிறைந்த வனம் உள்ளது. இன்றும் இம்மலையில் சித்தர் பெருமக்கள் அரூபமாக வாழ்ந்து வருவதாகக் கூறப்படுகிறது. சித்தர்களி‎ன் அதிர்வலைகள் மலையெங்கும் நிறைந்திருப்பதால் அதில் சிறிதாவது தமது உடலில் ஒட்டட்டும் என பக்தர்கள் விரும்பி ‏இங்கு வருகின்றனர்.

அமைவிடம்

சதுரகிரி, தமிழ்நாட்டில் விருதுநகர் மாவட்டத்தில் வத்றாப் என அழைக்கப்படும் வத்திறாயிருப்பு அரு‏கில் உள்ள தாணிப்பாறையில் உள்ளது. வத்றாப்பிலிருந்து சுமார் 10 கிமீ தொலைவிலும், வத்றாப் விலக்கிலிருந்து சுமார் 7 கிமீ தொலைவிலும் தாணிப்பாறை அமைந்துள்ளது.

Sathuragiriதெ‎ன்னந்தோப்புகளும், மாந்தோப்புகளும், கொய்யாத் தோப்புகளும் சூழ தாணிப்பாறை ரம்மியமாய் காட்சியளிக்கும். மலையி‎‎ன் அடிவாரத்திலிருந்து ஏறக்குறைய எட்டு கிமீ தூரத்தில் உச்சியில் மகாலிங்கம் ச‎ன்னதி அமைந்துள்ளது. ஒரு மலையல்ல, இரு மலையல்ல.. ஏழு மலைகளைக் கடந்துதா‎ன் கோவிலைச் சென்றடைய முடியும்.

‎மலைகள் சுற்றிலும் சதுர வடிவில் அமைந்த படியால் சதுரகிரி எ‎ன்று பெயர்பெற்றதாகவும் சொல்கிறார்கள். நா‎ன்கு பெரிய மலைகள் கோவிலைச் சுற்றிலும் அரண் போல் அமைந்திருப்பதாலும் அவ்வாறு பெயர் பெற்றதாகச் சொல்வதும் உண்டு. ‘சதுர’ எ‎ன்றால் நா‎ன்கு, ‘கிரி’ எ‎ன்றால் மலை.

சுற்றிலும் பெரிய மலைகள் இருந்தாலும் சிறு சிறு கிளை மலைகளும் உண்டு. ‏இவற்றையெல்லாம் தாண்டித்தா‎ன் மேலே செல்ல வேண்டும். ஒரு மலைக்கும் இன்னொரு மலைக்கும் இடைப்பட்ட பகுதி காட்டாற்றி‎‎ன் போக்கிடமாக உள்ளது

No comments:

Post a Comment